Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

இராணுவத்தினரின் உதவியுடன் அரியாலை கிழக்கில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளை

altஅரியாலை கிழக்கு பகுதியில் இராணுவத்தினரின் உதவியுடன் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நடைபெறுவதாக அப்பகுதி பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியிலிருக்கும் மணல் வளத்தை அழிக்கும் நோக்குடன் இரவு நேரங்களில் இராணுவத்தினரது உதவியுடன் இப்பகுதியிலிருந்து மணலானது உழவு இயந்திரங்களில் ஏற்றப்படுகின்றதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றுவதற்கு இராணுவத்தினருக்கு ஒரு தொகைப் பணம் கொடுத்தால் போதும் என்றும் 25 உழவு இயந்திரங்களில் மணல் ஏற்றுவதற்கு 10 ஆயிரம் ரூபா வரையிலும் இராணுவத்தினர் பணம் பெறுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியபோதும் இப்போதே வருகின்றோம் என்று தெரிவித்து தொலைபேசியை துண்டித்து விடுகின்றனர் என்று தெரிவித்த பொது மக்கள் ஒரு போதும் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த முன்வரவில்லையென்றும் தெரிவிகின்றனர்.

அரசாங்க அதிகாரிகளுக்கும் பல முறை எடுத்துக் கூறியும் இதுவரையில் எந்தவிதமான பதிலும் இல்லையென்று மக்கள் தெரிவித்துள்ளனர்.