Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரகீத் எஹெலியகொட காணாமல் போனதற்கும் புதிய நீதியரசருக்கும் தொடர்பு!

பிரகீத் எஹெலியகொட காணாமற்போனமைக்கும், புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பிரகீத் எஹெலியகொடவின் மனைவியான சந்தியா எஹெலியகொட தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சித்திரவதைக்குழு கூட்டத்தில் பிரகீத் எஹெலியகொட வேறு நாடு ஒன்றில் அகதியாக வாழ்வதாக மொஹான் பீரிஸ் தகவல் வெளியிட்டிருந்தார் என சந்தியா எஹெலியகொட நினைவுபடுத்தியுள்ளார்.

மொஹான் பீரிஸின் அந்த கருத்திற்கு அமைய அவரை ஒரு சாட்சியாளராக நீதிமன்றில் அமர்த்த பல மாத காலங்கள் எடுத்த போதும், இறுதியில் மொஹான் பீரிஸ் நீதிமன்றில் ஆஜராகி தனக்கு அந்த தகவலை வழங்கியது யார் என நினைவில்லை என சாட்சி அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரகீத் எக்னெலிகொட காணாமற் போனமை தொடர்பில் "கடவுளுக்குத்தான் தெரியும்" என மொஹான் பீரிஸ் ஹோமாகம நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளளார் என எஹெலியகொடவின் மனைவியான சந்தியா எஹெலியகொட இன்று கொழும்பு நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.  

தனது கணவர் கடத்தப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர் மீண்டும் வரும்வரை காத்திருப்பதாகவும் சந்தியா எஹெலியகொட குறிப்பிட்டார்.

இதற்கு புதிய பிரதம நீதியரசரிடமிருந்து நியாயம் எதிர்பார்ப்பதாகவும், அப்படி கிடைக்காவிடின் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டிய நியாயம் என்ன என சந்தியா எஹெலியகொட கேள்வி, நம்நாட்டில் காணாமல் போன எத்தனை எத்தனை ஆயிரம் பேர்களை அவர்களின் சொந்த-பந்த உறவுகள் தேடுகின்றன. இவர்களின் கண்ணீர்களுக்கு கவனமே செலுத்தாமல் பாசிச சர்வாதிகார குடும்ப ஆட்சியை தக்கவைக்க சகலதும் தொடர்கின்றன. இதில் (ராணுவ) ஆட்சியைப் பலப்படுத்த அமெரிக்கா உதவாவிட்டால் சீனா உதவும் என்கின்றார் கோத்தபாய….