Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இராணுவ விஸதரிப்பின் அங்கமான ‘யோக்கட்ட‘ தொழிற்சாலை

வடபகுதியில் மக்கள் இதுவரை மீளக்குடியமர இராணுவத்தால் அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பாலில் இருந்து உற்பத்தி செய்யும் "யோக்கட்' உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

அனுராதபுரம், பனாங்கொட இராணுவ முகாம்களில் ஏற்கனவே "யோக்கட்' உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. ஆனால் வடக்கில் முதன் முதலாக மயிலிட்டியில் இந்த தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இராணுவம் சார்ந்த உற்பத்திகளை உருவாக்குவது என்பது இராணுவம் சார்ந்த கட்டமைப்புக்களை விஸ்தரிக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதே இந்த தொழிற்சாலை.  இவ்வாறு உருவாக்கப்படும் இராணுவக் கட்டமைப்புக்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவ்வாறான கட்டமைப்புக்கள் நீடிக்கவே செய்யும்.

இவ்வாறான இராணுவ விஸ்தரிப் வாதத்தினை அம்பலப்படுத்தும் வகையில் புதியபாதையில் பயணிக்கும் வேலைமுறைகள் இலங்கை முழுவதும் அவசியாகின்றது. இராணுவ விஸதரிப்பு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல அனைத்து மக்களுக்கும் எதிரானதாகும்.