Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

குர்தீஷ் போராளிகளின் படுகொலைகளை கண்டிக்கின்றோம் !

பிரான்ஸ் தநைகரான பாரிஸில் குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் (Pkk) மூன்று பெண் செயற்பாட்டாளர்கள் சகீன் கன்சீஸ், லைலா சொய்லமேஸ், பிடான் டோகன் ஆகியோர் நேற்று இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சகீன் கன்சீஸ் குர்தீஷ் தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவர், பிடான் டோகன் குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் (PKK) செயற்பாட்டாளர், லைலா சொய்லமேஸ் பிரேசிலைத் தளமாகக் கொண்டியங்கும் குர்தீஷ் தேசிய காங்கிரசின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஒசாலன் சிறையில் இருந்து வருகிறார். அவருடன் துருக்கி பகுதியில் வாழும் குர்தீஷ் இன மக்களுக்கும் துருக்கிய இஸ்லாமிய அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்று வருகிறது. இப்பேச்சுவார்த்தைகளுக்கு மேற்படி மூன்று போராளிகளும் தடையாக இருப்பதாகவும், அதனால் துருக்கிய அரசின் உளவுத்துறையே இக்கொலைகளைச் செய்திருக்கக்கூடும் எனும் அபிப்பிராயமே பரவலாக உள்ளது.

சிரியப் பகுதியிலுள்ள குர்தீஷ் விடுதலைப் போராளிகள் அங்கு அரசு ஒன்றை அமைத்துள்ளனர். துருக்கியின் எல்லைப் பகுதியிலுள்ள பல பிரதேசங்களை இப் போராளிகள் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். இதனாலேயே சிறையில் இருக்கும் குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஒசாலன் அவர்களுடன் துருக்கிய இஸ்லாமியப் ஆட்சியின் பிரதமர் ஏர்ட்கன் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் கொலைகளை கண்டிப்பதுடன், அவர்களுக்கு எமது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.