Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரதம நீதியரசருக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம்!!!!

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.


பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நேரத்தில் தெரிவுக் குழுவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இவர்கள்தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசஆதரவுக்குழு  ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கட்டுப்படுத்துவதற்காகவும் அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உட்பிரவேசிக்காது தடுப்பதற்காக சுமார்படையினர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவப்  படையனிகள்  மற்றும் பொலிஸ் படையணிகளைச்  சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அதிவிசை நீர்ப்பாய்ச்சி வாகனங்கள், கலகத்தடுப்பு பிரிவு படையினர், கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சுப் படையணி போன்றனவும் குறித்த பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் மூவாயிரம் பேரடங்கிய வழக்குறைஞர்கள், பொலிஸாரால்போடப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிகளையும் உடைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முற்பட்டனர்.

குற்றப்பிரேரணையை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம்  மகஜர் ஒன்றைக் கையளிப்பதற்காகவேஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகையை நோக்கிப் புறப்படவிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேணைக்கு  எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.