Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்படுகின்றது

நிவிநெகும சட்ட மூலத்தினை மூன்றில்  இரண்டு பெரும்பான்மையினால் இன்று (08) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றியன் ஊடாக மிகுதியாக இருந்த கொஞ்ச நஞ்சு ஜனநாயக அலகினுயும் அழித்துள்ளது.

இந்தச் சட்டமூலத்தின் ஊடாக மைய ஆட்சியில் உள்ளவர்களின் பிரதிநிதியின் அதிகாரத்திற்கு உட்பட்டு பிராந்தியங்கள் நிர்வகிக்கபடப் போகின்றது. இச்சட்டமூலத்தின் மூலம் அதிகாரத்தினை மையத்தில் குவிக்கின்றது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. சிறுப்பான்மை கட்சிகளான  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசியகாங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி, தமிழத் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன  எதிராக வாக்களித்துள்ளன.

“செழிப்பான இல்லம் - வளமான தாயகம்” என்ற கோசத்தின் மூலம் தற்போது மகிந்த அரசினால் நடத்தப்பட்டுவரும் இராணுவ ஆட்சிமுறையில் புதிய நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி மக்களை மேலும் அடக்கி ஒடுக்குவதற்கான செய்றபாடே இது. முதலாளித்துவ ஆட்சிமுறையில் வழங்கக் கூடிய ஜனநாயகம் என்பது இந்த சட்டவாக்கத்தின் ஊடாக பறிக்கப்படுகின்றது.

ஏற்கனவே குடும்ப உறவைச் சுற்றிய அதிகாரக் கட்டமைப்பும், முதலீடுகளையும் பாதுகாக்கும் நோக்கில் அமைந்த கட்டமைப்புகளை உருவாக்கி வந்துள்ள இந்த அரசு, தொடர்ந்தும் தனது பாசிச கரத்தால் ஜனநாயம் என்ற போர்வையில் ஒழித்து மக்களின் கழுத்தை நெரிக்கின்றது. இவ்வரசு இலங்கை மக்களை பலகூறுகளாக பிரித்து மக்களின் அரசியல் உரிமைகளை பறித்துக் கொண்டும் வருகின்றது.

அனைத்துவகை ஜனநாயக மீறல்களை அம்பலப்படுத்துவோம்!