Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்து மீனவர்களும் ஒன்று சேர வேண்டும் -தேசிய மீனவர் அமைப்புகளின் ஒன்றியம்

altஅனைத்து மீனவர்களையும் ஒரு மத்திய நிலையத்திற்குள் இணைக்கும் நோக்கத்தோடு தேசிய மீனவர் அமைப்புகளின் ஒன்றியம் அமைக்கப்பட்டதாக அதன் அழைப்பாளர் பிரசன்ன அபேவிக்ரம கூறினார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது மேலும் கருத்து தெரிவித்த அபேவிக்ரம,

 

" மீனவர்கள் எனபோர் அனைத்து அரசாங்கங்களாலும் கவனிக்காது விடப்பட்ட சமூகமாகும். கடந்த காலங்களில் மீனவர்கள் பலவேறு போராட்டங்களை நடத்தினார்கள். எரபொருள் விலையேற்றத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில்  ஒரு மீனவரை இழக்க நேரிட்டது. ஆனாலும் இந்த அனைத்து போராட்டங்களும் தனித்தனியாகவே நடத்தப்பட்டன.

அனைத்து மீனவர்களையும் உள்ளடக்கிய மத்திய நிலைமொன்று இல்லை. ஆதலால், தேசிய மீனவர் அமைப்புகளின் ஒன்றியத்தின் நோக்கம், நாடு பூராவும் பரவலாக உள்ள அனைத்து மீனவர்களையும் ஒன்றிணைத்தல். பல்வேறு மீனவ அமைப்புகளின் தனித்துவம் அப்படியே இருக்க மீனவர்களின் பிரச்சினைக்காக ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்குதலாகும்.

அதேபோன்று மீன் விளைச்சலுக்கு நியாய விலையை பெற்றுக் கொள்ளல், எரி பொருள் பிரச்சினை போன்ற பொருளாதார பிரச்சினைகளுக்காக தோற்றி நிற்பதோடு, அதற்கு அப்பாலும் சென்று மீனவர்களின்

சமூக மற்றும் கலாச்சார பிரச்சினைகளை பிரதிநிதித்துவம் செய்வதும் மீனவர் அமைப்புகளின் ஒன்றியத்தின் நோக்கங்களாகும்" எனக் கூறினார்.

அடுத்து கருத்துத் தெரிவித்த அருட் தந்தை விக்ரம பொன்சேகா, "தெற்கில் மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சிணைகளுக்கு மேலதிகமாக வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்கள் விஷேட பிரச்சிணைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். அதேபோன்று தென்பகுதி மீனவர்ளை விட அதிகம் கப்பம் கொடுக்க வேண்டிய நிலையில் வடக்கு, கிழக்கு மீனவர்கள் இருக்கிறார்கள்." என்றார்.

தேசியக் குழு உறுப்பினர் - டப். ஜீ.வில்சன் குறிப்பிடும்போது, 'மீனவர் என்பது ஒரு பங்காளி. சிறிய படகொன்றில் கடலுக்குச் சென்றால் எல்லா செலவுகளும் வெட்டப்பட்ட பின்னர் மீன் விளைச்சலில் ஆறில் ஒரு பங்குதான் அவருக்கு கிடைக்கிறது. இயந்திர படகு என்றால் நான்கில் ஒரு பங்கு. இலுவைப் படகில் சென்றால் மீன் விளைச்சலில் 50 வீதம் படகின் உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டும். எஞ்சிய 50 வீதத்தில் ஐந்தில் ஒரு பங்குதான மீனவருக்குக் கிடைக்கிறது. மீனவர்களைப் பொருத்த வரை நிரந்தர வருமானமொன்று கிடைப்பதில்லை.  அவர்களுக்கு நிரந்தர வருமானமொன் தேவை " என்றார்.

தேசியக் குழு உறுப்பினர் -  லெனி பிரான்சிஸ், " மீனவர்கள் முகம் கொடுக்கும் எரிபொருள் பிரச்சிணை குறித்து நாங்கள் ஜனாதியுடனும் கதைத்தோம். இந்த எரிபொருள் விலையை எங்களால் தாங்க முடியாது. நாங்கள் அரசாங்கத்திடம் மானியம் கேட்கவில்லை. எரிபொருள் விலையை குறைக்குமாறுதான் கேட்டோம். எங்களுக்கு சீனி போலை தரப்பட்டுள்ளது' என்றார்.

தேசியக் குழு உறுப்பினர் - மஹேந்திர, " மீனுக்கு சரியான விலை கிடையாது. அதற்காக அரசாங்கம் தலையிடுவதுமில்லை. இன்று மீன் விலையை இடைத் தரகர்கள்தான நிர்ணயிக்கிறார்கள். நாங்கள் அதிகளவு மீன் பிடித்துக் கொண்டு வந்தால் விலையை குறைக்கிறார்கள். அதிகளவு மீன் பிடித்தால் வெறுங்கையுடன்தான் வீட்டுக்குப் போக வேண்டும். விளைச்சலுக்குப் பின்னரான தொழில் நுட்பம் இலங்கையில் இல்லவேயில்லை. அதனால் விற்கக் கூடிய மீன்கள் விற்கப்படுகின்றன. விற்க முடியாதவை கெட்டுப்போய் வீசப்படுகின்றன. தொழில் நுட்பம் இருந்திருந்தால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவாடு, மாசி ஆகியவற்றை குறைத்திருக்க முடியும்.

இன்று மீனவர் கிராமங்களில் உண்மையான மீனவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. மீனவர்கள் கடற்கரை மணலில் இருக்கும்போது, அமைச்சர்களினதும் MP க் களினதும் கையாட்களே வீட்டில் இருக்கிறார்கள்" என்றார்.

தேசியக் குழு உறுப்பினர்- மெக்சிமன் குஞ்சே " எங்கள் வலைகளை இந்திய மீனவர்கள் இழுத்துச் செல்கிறார்கள் இந்தியாவின் பெரிய ட்ரோலர் படகுகளில் எங்கள் வலைகள் சிக்கிக் கொண்டால் வெட்டிவிடுவதைத் தவிர வேறி வழியில்லை" என்றார்.

 

 

 

-www.lankaviews.com/ta