Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒக்டோபர் புரட்சியும், ஒக்டோபர் 21 எழுச்சியும்- யாழ் கூட்ட அறிக்கை

தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான கொடூரச் சுரண்டலுக்கும் ஏதேச்சதிகார அடக்கு முறைகளுக்கும் மட்டுமன்றி  தேசிய இனங்ககளின் சிறைச்சாலையாக விளங்கிய ரசியப் பேரினவாத ஒடுக்குமுறைக்கும் எதிராக வெடித்தெழுந்து வெற்றி பெற்றதே மாமேதை லெனின் தலைமையிலான 1917 ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியாகும் அதிலிருந்து எழுந்த அதிர்வலைகள் இன்றுவரை உலகம் பூராவும் எதிரொலித்தபடியே இருந்து வருகின்றன.

அதன் காரணமாகவே அனைத்து உடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி வரும் உலகின் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒக்ரோபர் புரட்சி காட்டிய புரட்சிகரப்பாதையில் போராடி வருகிறார்கள். அதன்வழியிலேயே 1966ஒக்ரோபர்  21 எழுச்சியானதுவடபுலத்தில் சாதியை தீண்டாமையை எதிர்த்து நின்ற புரட்சிகரப் போராட்டங்கள் ஆகியது அன்றைய போராட்டங்களே தமிழர் பழமைவாதத்தால் பேணிப் பாதுகாக்கப்பட்டுவந்த தீண்டாமையை முறியடித்து ஒருவரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தியது 1917ல் சோசலிசப் புரட்சியானது வர்க்கப்போராட்டத்தின் அடிப்படையில் ரசியக்கம்யூனிக்கட்சியின் தலைமையில் வெற்றி பெற்று ஜார் மன்னனின் ஏதேச்சதிகாரத்தை துடைத்தெறிந்;து அந்த மண்ணிலே சோசலிசத்தை நிலைநிறுத்தியது. அதே வர்க்கப்போரட்டப் பாதையில் இலங்கையில் புரட்சிகர கம்யூனிட்கட்சி தலைமையில் பழமைவாதத்தால் இறுகி நின்ற வடபுலத்து மண்ணிலே சாதியை தீண்டாமைக்கு எதிராகப் போராடி தீண்டாமைக் கொடுமையை முடியடித்தது. அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் சமத்துவத்தையும் சமூகநீதியையும் ஜனநாயகத்தையும் வென்றெடுத்து நிலைநிறுத்தியது கடந்த நுற்றாண்டில் வரலாற்றுத் தடம் பதித்து கொண்ட இவ்விரண்டு புரட்சியினதும், எழுச்சியினது அனுபவங்கள் இன்றைய இலங்கைச்சூழலில் ஆழ்ந்து நோக்கப்படவும் அவற்றின் வழியில் சிந்தித்து செயற்படவும் முன்வர வேண்டியவையாகும்


இவ்வாறு 1916 ஒக்ரோபர் புரட்சியும் 1966 ஒக்ரோபர் எழுச்சியும் எனும் தலைப்பில் 28.10.2012 அன்று யாழ்நகரில் இடம்பெற்ற பகிரங்க கருத்துரையில் உரையாற்றிய புதிய ஜனநாயக மாசிச லெனிசக் கட்சியின் பொதுச்செயலாளா சி.கா.செந்திவேல் கூறினார் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சட்டத்தரணி சோ.தேவராஜா இந்நிகழ்விற்கு தலைமைதாங்கினார்.


சி.கா.செந்திவேல் தொடர்ந்தும் தனது உரையில், இன்று நமது நாட்டின் பொருளாதார, அரசியல்,சமூக, பண்பாட்டுத் தளங்களில் முற்றுமுழுதான மக்கள் விரோதப்போக்குகள் வளர்க்கப்பட்டு செல்கின்றன. மகிந்த சிந்தனையானது தலைமை தாங்கும் தரகு முதலாளித்துவ பேரினவாத எதேச்சதிகாரஆட்சி அதிகாரமே சகலவற்றையும் தீர்மானிப்பது மட்டுமன்றி பாசிச சர்வாதிகாரமாக கோலோச்சிவருவதையும் காணமுடிகிறது. தேசியவாதம் பாசிசத்திற்கு இட்டு செல்லுமென் வரலாற்றுப்பட்டறிவின் யதார்த்தத்தை இலங்கையில் பௌத்தசிங்கள பேரினவாதம் இன்று அடையாளம் காட்டிநிற்கிறது இத்தகைய பேரினவாதம் என்பது ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுடன் கைகோர்த்து செல்கிறது. உலக வங்கி,சர்வதேசநாணயநிதியம்,ஆசியஅபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்தே எதிர்வரும் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளது என்றால் நாடு எங்கே இழுத்துச் செல்லப்பபடுகிறது என்பதை விபரிக்கவேண்டிய அவசியம் இல்லை. எனவே தெற்கில் சிங்கள உழைக்கும் மக்கள் மீதான பொருளாதார சுமை ஏற்றல்களுக்கும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் மறைப்புக்கட்டிக் கொள்ளவே தமிழ்,முஸ்லீம் மலையக தேசிய இனங்கள் மீதான பேரினவாத பேச்சுக்களும் நடமுறைச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன இதன் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கவும் சிங்களமக்களை திசைதிருப்பி வைத்திருக்கவும் குடும்பஅதிகாரத்தை தொடர்ந்தும் தமது கைகளில் வைத்திருக்க முடிகிறதே தவிர நாட்டையும் மக்களையும் சுவீட்சமான பாதையில் இட்டுச் செல்வதற்கல்ல என்பதே உண்மையாகும். இதனையே அமெரிக்க உலகமேலாதிக்க வாதிகளும் இந்தியப்பிராந்திய மேலாதிக்கசக்திகளும் விரும்புகின்றன அதற்கான காய்நகர்த்தல்களையே அவர்கள் இலங்கையில் மேற்க்கொண்டு வருகின்றார்கள்.  மறைக்கப்படும் இத்தகையஉண்மைகளை புரிந்து கொள்ளாது தெற்கின் சிங்களமக்களும் வடக்கு கிழக்கு  மலையகத்தின் தமழ் முஸ்லீம் மக்களும் தம்மைப்பினைத்துள்ளண வலிமைமிகுந்த கொடூர அடக்குமுறைச் சங்கிலிகளை உடைத்தெறிய முடியாது. இந்நிலையிலேயே 96 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒக்ரோபர் புரட்சியில் இருந்தும் 46 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற ஒக்ரோபர் 21 எழுச்சியில் இருந்தும் வரலாற்று அனுபவப்பாடங்கள் பெற்று முன்செல்ல வேண்டிய வரலாற்றுத் தேவை எம்முன்னால் உள்ளது என்றும் கூறினார்.


மேலும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா தனது தலைமைஉரையில் பின்வருமாறு கூறினார். இலங்கையர்களாகிய நாம் இன்று தரகு முதலாளித்துவத்தாலும் பேரினவாத ஒடுக்குமுறைகளாலும் ஏகாதிபத்திய உலகமயமாதலினாலும் இறுக்கி  அமுக்கப்பட்டோராக இருந்து வருகின்றோம். குறிப்பாகப் பேரினவாத ஒடுக்குமுறையானது தேசிய இனங்களை ஒடுக்கிவருவது முன் என்றுமில்லாதவாறு வேகமடைந்து நிற்கிறது அதனை எதிர் கொண்டு முறியடிப்பதில் கடந்த நுற்றாண்டிலும் சரி இப்பொழுதும் சரி தமிழ்த்தேசியவாதத்தினால் முடியவில்லை. அகிம்சைப்போராட்டங்களாலும் பின்பு ஆயுதப் போராட்டங்களாலும் எதையுமே சாதிக்க இயலவில்லை. அது ஏன் என்பது பற்றிய ஒரு மீள்பரிசீலனைக்கோ மறுமித்பீட்டுக்கோ எந்தவொரு தமிழ்தேசியவாத தலைமையும் தயாராக இல்லாத துர்வதிஸ்ட நிலையே நீடித்துவருகிறது இவ்வாறான இன்றைய சூழலையே ஒக்ரோபர் புரட்சியினதும் ஒக்ரோபர் 21 எழுச்சியினது பாடங்களும் படிப்பினைகளும் ஒடுக்கப்படும் தமிழ்தேசிய இனத்திற்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் அவசியமானவையாகும். மீண்டும் மீண்டும் தமிழ்தேசியமானது பேரினவாதத் ஒடுக்குமுறையைச் சரியான தளத்தில் நின்று எதிர்கமுடியாது இருப்பதன் அடிப்படை அது தமிழர் பழமை வாதத்தின் வேர்பிடித்துநிற்பதேயாகும் அதிலிருந்து விடுபடாதவரை தமிழ்தேசிய இனத்திற்கு தமிழ்தேசியவாத தலைமைகளால் வெறும் வாய்பேச்சு தலைமையை மட்டும் அளிக்கடியுமே தவிர விடுதலையை எவ்வகையிலும் பெற்றுக்கொள்ள உதவமாட்டாது. 1966 ஒக்ரோபர் எழுச்சியானது தாழ்த்தப்பட்ட மக்கள் தனித்து நின்று மட்டும் போராடக்கூடிய வழிமுறையை காட்டப்படவில்லை உயர்த்தப்பட்டேர் எனப்பட்ட மக்கள் மத்தியில் இருந்த நல்லென்னம் கொண்டோர் ஜனநாயகவாதிகள்,முற்போக்காளர்கள்,இடது சாரி சக்திகள் ஆகியோரோடு இணைந்து நின்ற வெகுஜனப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையாலேயே அன்றையபோராட்டங்கள் வெற்றி பெற்றன இந்த வரலாற்று அனுபவ உண்மையினை தமிழ்தேசியவாதிகள் தொடர்ந்தும் படிக்கமறுப்பது மட்டுமன்றி வரலாற்றில் அவற்றை மறைக்கவும் செய்கிறார்கள் அதற்குக் காரணம் இன்றும் அவர்களிடம் இறுகிய நிலையில் இருந்து வரும் பழமைவாதக் கருத்தியலே ஆகும். வர்க்கத்தையும் சாதியத்தையும் பெண்னடிமைத்தனைத்தையும் தகர்க்க விரும்பாத தமிழ்த் தேசியத்தைக் கேள்விக்குட்படுத்தாது அல்லது அதனைத்தாண்டிச் செல்லாத எத்தகைய போராட்டத்தாலும் தமிழ்தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுக்கமுடியாது அதேபோன்று பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு தீனி போடும் வகையில் அன்றி சிங்கள உழைக்கும் மக்களிடம் சென்றடையக்கூடிய நியாயமான கொள்கைகளையும் வழிமுறைகளையும் முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களின் விடுதலையை நோக்கி செல்லமுடியும் இன்றைய. தமிழர் ஆதிக்க அரசியல் தலைமைகளைத் தவிர்த்து விட்டு உழைக்கும் தமிழ் மக்களின் தலைமையிலான நான்காவது கட்டப் போராட்டம் ஒன்றினை தோற்றுவிப்பதே இன்றையதேவையாகும் அது பரந்து பட்ட தமிழ்மக்களை அணிதிரட்டிய வெகுஜனப்போராட்டங்களாகவே இருக்கமுடியும் இதனைவிட வேறு மார்க்கம் எதுவம் தமிழ்மக்கள் முன்னாலும் இல்லை எனவும் கூறினார்.கருத்துரைமுடிவில் திறந்த கலந்துரையாடலில் வருகைதந்தோர் பயன்தரும் பல்வேறு கருத்துக்களையும். முன்வைத்தனர்.  

பு.ஜ.மா.லெ.கட்சி
வடபிராந்தியக்குழு      
30.10.2012