Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்த ராஜபக்‌சவிற்கு நாளொன்றுக்கான செலவீன ஒதுக்கீடு இரண்டு கோடி ரூபா!

altஇலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  ஒருநாள் செலவாக இரண்டு கோடி ரூபாவை ஒதுக்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இலங்கையின் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில்  ஜனாதிபதியின் ஆண்டுச் செலவாக 740கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அது மட்டுமின்றி மகிந்தவின் குடும்பத்தினருடன் சம்பந்தப்பட்ட அமைச்சுகளினதும் மற்றும் அவரது நெருங்கிய சகாக்களின் அமைச்சுகளுக்குமான நிதி ஒதுக்கீட்டிலும் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.

மகிந்தவின்  குடும்பம் மற்றும் சகாக்களுடன் தொடர்புடைய அமைச்சுகளுக்குமாக அடுத்த வருடத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விபரம்.

1. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச – 740கோடி ரூபா,

2. பாதுகாப்பு அமைச்சு  (கோட்டாபய ராஜபக்ச) –  29,000கோடி ரூபா,

3. துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சு ( நாமல் ராஜபக்ச கட்டுப்பாடு) – 13,161கோடி ரூபா

4. நிதி, திட்டமிடல் அமைச்சு (மகிந்த ராஜபக்ச)  – 8,746கோடி ரூபா

5. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (பசில் ராஜபக்ச)  - 8,890கோடி ரூபா

இதன்படி மொத்தமாக மகிந்த ராஜபக்ச  குடும்பத்துக்காக  2013ம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 61,000 கோடி ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது.

-http://lankaviews.com/ta