Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனக்க மற்றும் சிசித் ஆகியோரின் வாகன விபத்து திட்டமிட்ட ஒன்று!

இன்று அதிகாலை அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒண்றியத்தின் செயற்பாட்டு உறுப்பிணர்களான ஜானக ஏக்க நாயக்க மற்றும் சிசித் பிரியங்கர ஆகிய இருவரும் உயிரிழந்தது திட்டமிடப்பட்ட வாகன விபத்து என தாம் சந்தேகிப்பதாக அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒண்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அது தொடரப்பில் கிடைத்துள்ள தகவள்களுக்கு ஏற்ப சந்தேகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த விபத்தை கன்னால் கன்ட சாட்சி ஒருவரால் குறிப்பிடப்பட்டதாவது வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் பக்கம் திருப்பப்பட்டாதால் மோட்டார் சைக்கில் மின் கம்பம் ஒன்றில் மோதியதாக குறிப்பிட்டார் . பின்னர் குறிப்பிட்ட மோட்டார் வாகனம் அந்த இடத்திலிருந்து வேகமாக சென்று விட்டதாகவும் கூறினார்.

அன்று இரவு அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒண்றியத்தின் செயற்பாட்டாளரான சிந்தக்க ராஜபக்கஸ தோழர் மோட்டார் சைக்கிலில் யக்கள நகரத்திற்கு வந்து மீண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு போகும் பொழுது இதே போன்ற ஒரு சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டதாகவும் பின்னர் அவர் தன்னை விரட்டி வந்த வாகனத்தை திசை மாற்றிவிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளார் அவ்வாருதான் வந்த மோட்டார் சைக்கிலை ஜானக்க மற்றும் சிசித் தோழர்களுக்கு கொடுத்த அவர் தான் முகம் கொடுத்த அனுபவத்தை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி கவணமாக செல்லும் படி கூறி இருக்கின்றார்

கடந்த இரண்டு நாட்களிலும் இரவு வேலைகளில் தங்கியிருந்த இடத்திற்கு பின்னால் விரட்டி வந்த சமபங்களும் உண்டு.

இந்த விபத்து நடந்த  இடத்திற்கு புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்திருந்தனர்.அவர்கள் அவ்வாரு அவசர விபத்தொன்றில் தலைஈடு செய்வது ஏன்? என்பது பிரச்சினையாகும்.

பல்கலைக்கழகத்தில் அரசாங்கத்திற்கு எதிராக எழுச்சி பெற்று வரும் எதிர்ப்பை அடக்கி உடைத்து தள்ளிவிட்டு மாணவர்களை பயமுறுத்தி பாடசாலைகளை திறக்க வைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது.இம்முறை பல்லைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு உச்சக் கட்டத்தை அடைந்தை அடுத்து.அவர்கள் அந்த செயற்பாட்டை உடனடியாக மறுபக்கம் திருப்பிவிடும் நோக்கத்துடன் செயற்பட்டனர்.

இந்த அனைத்து விடயங்களையும் பார்க்கும் பொழுது மேற்படி விபத்து தொடர்பில் சந்தேகம் தோன்றுவதோடு அது திட்டமிடப்பட்ட விபத்து என நாங்கள் கூறுகிறோம்.வெள்ளைவேன் கடத்தலுக்கு பதிலாக ஆட்சியாளர்கள் புதிதாக கண்டிபிடித்த அடக்குமுறை இயந்திரம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.எனவே இதனை முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.நாட்டின் ஜனநாயகத்தை இந்த அளவு கொடூரமான நிலைக்கு இழுத்து வீசுவதாக இருந்தால் அதுபெரிய அழிவொன்றிற்கு முன்னறிவித்தலாக இருக்கமென குறிப்பட விரும்புகிறோம்.இந்த அநியாயம் இன்று இரண்டு மாணவர்களுக்கு நடந்திருக்கின்றது. ஆனால் நாலை முழு சமூகத்தையும் குறிவைத்து இந்த அடக்கு முறை தலை தூக்க்க் கூடும்.எல்லாத் தாய் மார்களிடமும் தந்தை மார்களிடமும் நாம் கேட்டுக்கொள்வது ஜானக்க ,சிசித் ஆகிய இரண்டு தோழர்களும் பிரதி நிதித்துவப் படுத்தியது உங்களது பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகாப்பதறகே.

ஆகவே இந்த அநீதிக்கு எதிராக வீதிக்கு வருமாறும் சுதந்திர கல்வியை பெற்றுக் கொள்வதற்காக முன்வருமாறும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கு எதிராக போராடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

ஜானக்க ,சிசித் தோழர்கள் உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் என்றென்றும் அமரர்களாக இருப்பார்கள்.இலங்கை மாணவர் இயக்கத்தின் வீர வணக்கத்தை நாம் அவர்களுக்கு வழங்குகிறோம்.

-http://www.lankaviews.com/ta