Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர்களின் நடைபயணம் ஆரம்பம் (படங்கள்)

 

altசுதந்திர கல்வியையும் கல்வியின் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செயயப்பட்டிருந்த பாரிய நடைப்பயணம் இன்று காலை பேராதெனிய பல்கலைக்கழகத்திலிறுந்து ஆரம்பமாகியது. 

இந்த நடைபயணம் தொடர்நது 05 நாட்கள் மேற்  கொள்ளப்பட விருக்கின்றது.  மாவனல்ல ,அம்பே புஸ்ஸ, நிட்டம்புவ,கலனி ஊடாக கொழும்பிற்கு வர ஏற்பாடகி இருக்கிறது.

 

இந்த எதிர்ப்பு நடைபயனத்தின் கோசங்களாவன,

சதந்திரக்கல்வியையும் கல்வியின் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்று அனிதிரள்வோம்.

கல்வியில் சம உரிமையை பெற்றுக் கொள்வதற்காக அணி திரள்வோம்.

விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைனகளுக்கு உடன்தீர்வை பெற்றுக் கொடு.

பாடசாலைகளை மூடுவதையும் பாடசாலைகளில் பணம் அறவிடுவதையும் உடனே நிறுத்து!

தனியார் பலகலைக்கழகங்களை உடனே மூடி விடு!

தேசிய உற்பத்தியில் கல்விக்காக 06 % ஐ ஒதுக்கு.

சுதந்திர கல்வியை பாதுகாக்கும் போராட்டத்தில்  கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒனறியத்தின் ஒருங்கினைப்பாளர் தோழர் சஞ்ஜீவ பண்டாரவை விடுதலை செய்!

மாலபே தனியார் மருத்துவக் கல்வி நிலையத்தை மூடி விடு!

கல்வி நிருவனங்களை இரணுவ மயப்படுத்தல் மற்றும் மாணவர் அடக்கு முறையை உடன் நிறுத்து!

ஆகிய கோசங்களாகும்.

alt

alt

alt

alt

alt

alt

alt