Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கிற்கு பிந்தி…., கிழக்கிற்கு முந்தி!

"டிவெறென்சான டிமொக்கிறஸி"

தேர்தல் என்ன? எங்கும் எதிலும் வித்தியாசமான "ஜனநாயகப் படைப்புக்களைப்" பரிமாறும் பாங்கு மகிந்த சிந்தனைக்கு உண்டு. அதன் பிரதிபலிப்பை வட-கிழக்கின் மாகாணசபை அறிவிப்புக்களில் காணலாம்.

முள்ளிவாய்க்காலின் பின்னான தமிழர் தாயகத்தின் நிலை, திறந்தவெளிச் சிறைச்சாலையிலான ராணுவக் காட்டாச்சியின் கோலோச்சலே! ஏழு மாகாணங்களிற்கான சிவில் நிர்வாக நிர்வாகஸ்தர்கள் சாதாரண அதிகாரிகள். ஆனால் வட-கிழக்கில் மட்டும் ராணுவக் கட்டளைத் தளபதிகள்! கேட்டால் இவர்கள் "மக்கள் காவலர்களாம், மக்கள் ராணுவமாம்".

சரி இந்த "மக்கள் படையின" (பாசிஸ) விடுதலைப் பிரதேசங்களுக்கு அறிவிக்கபட்ட தேர்தல் நடைமுறை வடக்கிற்கு ஒரு வருடம் பிந்தியாம், கிழக்கிற்கு ஒருவருடம் முந்தியாம்! இதற்கு ஆதிக்கத்தார்கள் சொல்வதை விட மக்கள் மத்தியில் இருந்து வரும் காரணிகளே பிரதானியாகும்!

வடக்கில் தேர்தல் நடந்தால், அரச தரப்பார்க்கு அம்போதான்! கிழக்கில் மூவின மக்களின் வாக்குகள். அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கிடையிலான போட்டியில் தில்லுமுல்லை நடாத்தி, தன் கெட்டித்தனக் காரியத்தை ஊர்-உலகிற்கு வெற்றியாகக் காட்டலாம்! தீர்வை இழுத்தடிக்கலாம்! தவிரவும் இத்தேர்தலும் கண்டிப்பாக நேர்மை கொண்டு நடக்காது. அப்படலம் இப்பவே ஆரம்பித்து விட்டது.

கிழக்கு மாகாணசபை வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்!!

கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் எதிரணியில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் வருகின்றனன.!

தனக்கும் இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த காரைதீவு பிரதேசசபை தலைவர் செல்லையா இராசையா காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்-முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டிய தருணமிது!

சிந்தித்து செயற்பட்டால் பிரித்தாளும் "அரச டிமோக்கிறசி" மக்கள் ஜனநாயகமாக மாறும்!

--அகிலன் 1/07/2012