Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்...! பாகம் 02

ஈரோவால் கூட்டிக்கட்ட நினைத்த ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜேர்மனைப் பலவீனமடைய வைக்கும் பிரான்சின் கனவும் இதில் ஒன்றாக இருந்தது. ஆனால் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளைவிட ஜேர்மன் ஈரோவால் இலாபமே அடைந்தது. 1990 க்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஜேர்மனின் ஏற்றுமதி 348 பில்லியன் ஈரோவில் இருந்து 984 பில்லியன் ஈரோவாக வளர்ந்தது. இது ஏறத்தாழ 3 மடங்கு வளர்ச்சியாக இருந்தது. ஜேர்மனியின் இறக்குமதியும் 293 பில்லியன் ஈரோவில் இருந்து 806 பில்லியன் ஈரோவாக வளர்ந்தது. ஜேர்மனின் இந்த ஏறுநிலை வளர்ச்சியுடன் பிரான்சால் போட்டிபோட கனவிலும் முடியவில்லை. மேலும் ஜேர்மனியின் வெளிநாட்டு வர்த்தக உபரி 2000ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்து வருடத்தில் (2005)  22 சதவீதம் அதிகரித்திருந்தது.

 

இது 2007 ஆம் ஆண்டு அதன் உயர்ந்த சாதனையாக 200 பில்லியன் ஈரோவை அது எட்டியது. கடந்த 10 வருடத்தில் ஜேர்மனின் 1 அலகுக்கான உற்பத்திச் செலவு ஆண்டொன்றுக்கு 0.7 சதவீதமாகவே உயர்ந்தது. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரியாக 2.1 சதவீதமாக இருந்தது. குறிப்பாக பிரான்ஸ் இச்சமச்சீர் ஆண்டில் இரண்டு மடங்காக 1.9 சதவீதமாக இருந்தது. ஜேர்மனியின் வெளிநாட்டு வர்த்தக உபரி 7.1 சதவீதமாகவும், பிரான்ஸ், பிரிட்டன் முறையே 3.5, 6.8 சதவீதம் பற்றாக்குறையையும் கொண்டிருந்தது. ஆனால்   சீனாவின் வளர்ச்சி அசுரவேகத்தில் காணப்பட்டது. 1990 இல் 62 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதிகளாக இருந்து, 2008 ஆம் ஆண்டு இது 22 மடங்காக அதிகரித்து 1.4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்ந்திருந்தது. ஜேர்மன் 2009 இல் பொருளாதாரச் சரிவுகளைச் சந்தித்திருந்த போதும், அடுத்த வருடமே அது தன்னைச் சுதாகரித்து எழுந்திருந்தது. இது ஏறத்தாழ தனது முதல் வருடத்துக்கான (2008) சாதனையின் அளவையும் கொண்டும் இருந்தது என்பது, ஆச்சரியமான முயற்சியாகும். இதன்போது, சீனாவுக்கான ஜேர்மனியின் ஏற்றுமதி 44 சதவீதமாகவும், ரசியாவுக்கான ஏற்றுமதி 28 சதவீதமாகவும் கொண்டு இச்சாதனையை எட்டியும் இருந்தது.

இவ்வாறான ஐரோப்பிய நாடுகளின் முரண்பாடுகளால், இவர்களின் எடுபிடிகளான அரபு நாடுகளின் பகற்கொள்ளை ஆளும் வர்க்கத்தினர், தத்தமது உள்நாட்டில் எழுந்துவரும் சமூகப்பிரச்சினையை முன்போல ஒடுக்கவும், நசுக்கவும் முடியாமல் பலவீனமடையத் தொடங்கினர். இதனால் அரபு நாடுகளில் ஆளும் வர்க்கத்தால் கொதிநிலையில் உலையேற்றி வைத்திருந்த மத அடிப்படைவாதமும் பலவீனமடையத் தொடங்கியது. இதைச் சமூகநெருக்கடிகள் மேவிப் படர்ந்து கிளர்ந்தெழத் தொடங்கின. இந்த உள்ளும் புறமுமான பல வீன நிலைகளால் அமெரிக்காவால் ஈராக்கில்                                                    மாதிரி ஓர் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை                 வரலாறு வழங்கியிருக்கவுமில்லை. இதைத்தான் வரலாறுகள் எப்பொழுதும் ஒரேவிதமான சந்தர்ப்பத்தை மீண்டும் ஒருமுறை யாருக்கும் வழங்குவதில்லை! என்று கூறுவர். இவை இப்படி இருக்க துனிசியா வில் ஒரு நடைபாதை வியாபாரியின் தற்கொலைத் தீக்குளிப்புச் சுவாலைகள் எகிப்து, அல்ஜீரியா, மொராக்கோ, வட சூடான், ஏமன், லிபியா, ஜோர்தான், பஹ்ரைன்... என்று கொழுந்துவிட்டுப் பரவி வருவதாக ஊடகங்கள் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றன.

அரபுநாடுகளின் தொடர் எண்ணை வயல்கள் தீப்பிடித்து எரிந்தால் எப்படி இருக்குமோ, அது போல இந்தப் 'புரட்சித் தீ' பரவி வருவதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. இவற்றை 'புதிய துவக்கம்' என்றும், 'வண்ணப் புரட்சி' என்றும், 'அரபு வசந்தம்' என்றும்..., வாயார வண்ண வண்ண ஊதுகுழலாக ஊதுகின்றனர். இந்தத்தீயின் முதல் திரியாக வர்ணிக்கப்படும் மொகம்மது பௌவாசிசி, துனிசியாவின் தென்பகுதியிலுள்ள சிடி பௌசித் நகரில் வசித்த ஒரு வேலையற்ற தகவல் தொழில் நுட்பப் பட்டதாரி ஆவார். வேலைகிடைக்காத காரணத்தினால் தெருவிலே தள்ளுவண்டிலில் பழங்களை விற்று வந்தபோது, தெருவோர வியாபார உரிமம் பெறவில்லை என்று பொலிசாரின் தொடர் கெடுபிடிக்கு உள்ளாகியும் வந்தார். இதனால் மனமுடைந்து கொதிப்புற்ற இந்த வேலையற்ற பட்டதாரி இளைஞன், அந்த நகராட்சி அலுவலகத்துக்கு முன்பாக டிசம்பர் 17ம் திகதி தீக்குளித்தான். ஏழை நாடாக இருந்தாலும் (இலங்கையைப் போல்) துனிசியா படித்தவர்கள் நிறைந்த ஒரு நாடாகும். இங்கு வேலையில்லாத ஒரு தொகை இளைஞர்களும், வெளிநாடு செல்லமுடியாத பெருவாரி இளைஞர்களும் தமது கோபத்தை கலகமாகக் காட்டினர். இவர்களை 'அல்கைடா' என (இலங்கையில் புலிகள் என்பதுபோல) முத்திரை குத்தி, இந்த ஏகாதிபத்திய கைப்பொம்மை அரசுகள் சித்திரவதை செய்து சிறையில் அடைத்தும், ஏன் சுட்டும் கொன்றது.முன்னைநாள் பிரான்சுக்கொலனியும், தற்போது அதன் வர்த்தகக் கூட்டாளி நாடுமான    துனிசியா வின் இளைஞர் கிளர்ச்சி ஒர் கட்டற்ற (ஸ்தாபனமற்ற) கிளர்ச்சியாகவே வெடித்தும் இருந்தது.

உண்மையில் இந்தத் தீ   துனிசியாவில் இருந்து பரவியிருக்கவில்லை. இது முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஊற்று என்று வர்ணிக்கப்படும் எகிப்தில் இருந்தே உருவாகியும் இருந்தது. இந்த எகிப்து உலகில் 15 ஆவது சனத்தொகை கூடிய நாடாக, மேற்காக லிபியாவையும், தெற்காக சூடானையும், கிழக்கே இஸ்ரேல் மற்றும் காசாக்                 கரையையும் கொண்டுள்ளது. வடக்காக மத்தியதரைக் கடலையும், கிழக்குப்புறமாக செங்கடலையும் கொண்டு, சீனாய் தீபகற்பத்தின் மூலம் ஆசியாவின் எல்லையைத் தொட்டுக்கொண்டும் இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டுவரையான நான்கு வருடத்தில், எகிப்தில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுமிருந்தனர். கிட்டத்தட்ட 1 900 க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புப் போராட்டங்களை இந்த 4 வருடத்தில் இவர்கள் நடத்தியிருந்தனர். இவற்றை 'அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் எகிப்து கண்டிருக்கக் கூடிய மிகப்பெரிய சமூக இயக்கத்தில் இருந்து எழுந்து வந்துகொண்டிருக்கிறது' என்று - ஜோயல் பெய்னின் இதை வர்ணிக்கின்றார். எகிப்தில் 44சதவீத மக்கள் வெறும் 2டொலர் தினக்கூலிக்குத் தள்ளப்பட்ட நிலையிலும், ஓய்வுவயதைக் கடந்தும் ஆலோசகர்களாக அரசுக்கு முண்டுகொடுத்து தேசியவருவாயில் 3 பில்லியன்களை விழுங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் இத் தொழிலாளர்களின் போராட்டம் 2006 ஆம் ஆண்டிலிருந்து மிகத்தீவிரமடையத் தொடங்கியது. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் -6 ஆம்திகதி மஹல்லா அல் குப்ரா தொழில் நகரில் நடந்த வேலைநிறுத்தத்தில் 28,000 தொழிலாளர்கள் இப் போராட்டத்தில் குதித்திருந்தனர். இப்போராட்டமானது முபாரக் இராணுவத்தின் ஒடுக்குமுறையால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த இரத்த ஒடுக்குமுறையால் எகிப்தின் நகர்ப்புற நடுத்தர புத்திஜீவிகளால் 'ஏப்பிரல் -6' என்னும் இயக்கம் (2008) உருவாக்கப்பட்டிருந்தது. இதேபோலத்தான் முள்ளிவாய்க்காலில் புலிகள் இரத்தவெள்ளத்தில் அழித்தொழிக்கப்பட்டபோது, அதன் தாக்கத்தால் வெளிநாட்டில் வாழும் மத்தியதர அறிவுஜீவிகளால் 'மே -18' இயக்கமும் உருவானது.
எகிப்திலே கடந்த நான்கு வருடங்களாக 1.7 மில்லியன் தொழிலாளர்களுக்கு மேல் வீதியில் இறங்கி இரத்தம் சிந்திப் போராடியிருந்தனர்.  மாதம் ஒன்றுக்கு சராசரியாக 64 அமெரிக்க டொலருக்கு வேலை புரிந்த இந்தத் தொழிலாளர்கள் தமது ஊதியத்தை ஆகக்குறைந்தது 240 அமெரிக்க டொலர்களாக உயர்த்தித் தரும்படி    கோரி  வீதியில் இரத்தம் சிந்தியும் போராடியிருந்தனர். (இவர்களின் தொழிற்சங்கங்களில் பல ஏகாதிபத்திய கைக்கூலிகளாகவும் இருந்தன என்பது இன்னொரு வருத்தத்துக்குரிய -சந்தர்ப்பவாத- விடயம்) ஆனாலும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக எந்த மக்களும் தன்னிச்சையாக வீதிக்கு வந்து போராடியிருக்கவில்லை. துனிசியாவில் கிளர்ந்த போராட்டம் தான் எகிப்தில் பரவி, அது வட அபிரிக்க அரபுநாடுகளில் பரவுவதாக, முதலாளித்துவ ஊடகங்கள் அப்படியென்ன வாழைப்பழத்தில் ஊசியேற்றுகின்றன.

துனிசியாவில் ஒரு பட்டதாரியின் தற்கொலைத் தீக்குளிப்பு டிசம்பர் 17 நிகழ்ந்தது. ஆனால் எந்த மக்களும் வீதிக்கு உடன் வந்திருக்கவில்லையே ஏன்? வேலையில்லாப் பட்டதாரியான ஒரு தள்ளுவண்டி பழ வியாபாரியின்  இந்த மரணம்  2011 ஜனவரி 04ஆம் திகதியே நிகழ்ந்தது! இதற்குப்பிறகு பல இளைஞர்களும் யுவதிகளும் தெருவில் இறங்கிப் போராடி இருந்தபோதிலும், இளைஞர்கள் மட்டுமே தொடர்ந்தும் தீக்குளித்திருந்தனர். ஆனால் மாசி 11ஆம் திகதி இது எகிப்தில் தீப்பிடித்திருந்ததாக ஊடகங்கள் செய்திகளை வெயிட்டன.

எகிப்திலே தொழிலாளர் போராட்டம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு, ஏப்பிரல் 06 இயக்கமும் உருவாகியிருந்தது. ஆனால் இவர்கள் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்தவர்களே அன்றி, அதன் ஓர் அங்கமல்ல. எகிப்தின் சட்டபூர்வமான பகற் கொளையின் ஆளும் வர்க்கத்தின்  (முபாரத்தின்) நிகழ்கால கொள்ளை (தனியார்மயமாக்கல்) 300 அமெரிக்க டொலரில் இருந்து - 7000 கோடியாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. 'தேசிய ஜனநாயகக் கட்சியின்' பொதுச் செயலாளர் அகமது இஸ்சின் சொத்து 1800 கோடி டொலர்கள். சுற்றுலாத்துறை அமைச்சரான ஜோஹயர் காரனாவின் சொத்து 1300 கோடி அமெரிக்க டொலர் சொத்து.   மற்றும் வீட்டுவாரியம்   உள் அமைச்சு  1100 கோடி 800 கோடி அமெரிக்க டொலர்களாக மதிப்பிடவும் பட்டுள்ளது.

எகிப்தின் போராட்டம் துனிசியாவில் இருந்து பரவியதல்ல. அமெரிக்காவுடனான பகையை' விடுத்து 'புதிய துவக்கத்தை ஏற்படுத்துமாறு அமெரிக்க அதிபர்  ஓபாமா வேண்டுகோளை விடுத்தார்.  கெய்ரோ பல்கலைக் கழகத்தில் 'புதிய துவக்கத்தை' முன்மொழிந்த (யூன் -04-'09) ஒபாமா ''உலகம் முழுதும் காணப்படும் வன்முறையை எதிர்த்து இரு தரப்பும் (மறுதரப்பு யார்?) போராட முடியும் என்றார்''. மேலும் இஸ்லாமியருக்கு இடையே பதற்ற நெருப்பை காலனிய நாடுகள்தான்  ஊதிப்பெருதாக்கியதாக ஒப்புக்கொண்ட ஒபாமா இஸ்லாமியருக்கு உண்டான உரிமைகளும் வாய்ப்புக்களும் காலனிய நாடுகளால் மறுக்கப்பட்டதாலேயே (தரகுகள் யாருக்காக இதை மறுத்தார்கள்) இரு தரப்பினருக்கும் (மீண்டும் மறுதரப்பினர் யார்?) பனிப்போர் மூண்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த புதிய துவக்கத்துக்குப் பிறகுதான் துனிசியா வில் இருந்து ஆபிரிக்க அரபு நாடுகள் தொடக்கம் மேற்காசியா துருக்கி வரை மக்கள் போராட்டம் பரவி இருந்தது. துனிசியாவில் இளைஞன் முகமது இறந்த பின்னே தானாடவில்லை என்றாலும் தசையாடியதாக எகிப்தில் எந்த அசுமாத்தமும் நிகழ்ந்திருக்கவில்லை. வங்கிக் கடனைக் கட்ட வழியில்லாத இளைஞர்கள் யுவதிகளை இராணுவம் முதல் பொலீஸ் வரை கைது செய்து சித்திரவதைகள் முதல் பாலியல் பலாத்காரம் வரை அரசு இயந்திரத்தின் மூச்சிரைக்கும் வரை அனைத்தையும் செய்து முடித்தது.

எகிப்தின் தேசியவாதி எனக்கருதப்பட்ட நாசருக்குப் பின் பதவிவகித்த அன்வர் சதாத் பாலஸ்தீனப் போராட்த்துக்கு வழங்கி வந்த தனது தார்மீக ஆதரவை விலக்கி அமெரிக்காவின் கூட்டாளியாக மாறினார். இதன்பின் மேற்காசியாவில் இஸ்ரேலுக்கு அடுத்து எகிப்து அமெரிக்காவின் அரபுத் துரும்புச்சீட்டானது. இருப்பினும் அன்வர் சதாத்தை படுகொலை செய்த எகிப்து இராணுவவீரன் பின்லேடன் கொலைக்குப்பின் அல்கைடாவின் இடைக்காலத் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். அன்வர் சதாத்தின் பின் பதவிவகித்த  இன்றைய கோஸ்னி முபாரக்    உலகில் மிகச்சிறந்த  பொருளாதாரச் சீர்திருத்தவாதியாக உலக வங்கி கௌரவித்தது. இதற்கு கைமாறாக அமெரிக்கா ஆண்டுதோறும்  200 கோடி அமெரிக்க டொலரை பரிசாக வழங்கி வந்தது.

எகிப்திலே இந்த சீர்திருத்தவாத அரச இயந்திதத்தின் மனித உரிமை மற்றும் மக்கள் விரோதத்தை இணையத்தளத்தில் ஒர் இளைஞன் வெளியிட்டான்! ஆனால் அவன் சிலநாட்களில் கொல்லப்பட்டான். இந்த இளைஞன் அளவுக்கதிகமான போதைவஸ்தை உட்கொண்டதால் மரணமானதாக அரசயந்திரம் கூறியது. இதை எதிர்த்துத்தான் (முகப்புப் புத்தகப்புரட்சி) மக்கள் வீதிக்கு இறங்கத் தெடங்கினர். இந்த இளைஞனின் கொலைதான் எகிப்தில் மூண்டதே ஒழியஇ துனிசியாவின் நெருப்பு இங்கு பற்றவில்லை! (துனிசியாவின் தென்பு இதற்கு உதவியிருக்கிறது). இஹ்வானுமீன் இயக்கம் உலகில் இயங்கும் 80 நாடுகளில் ஆதிக்கத்தை வைத்திருக்கும் ஒர் சர்வதேச இயக்கமாகும். இதன் தலைமை எகிப்தையே மையப்படுத்தியுள்ளது. எகிப்தில் மட்டும் இவ்வியக்கத்துக்கு 06 இலட்சம் (இணைய உறுப்பினர்கள் உள்பட) உறுப்பினர்கள் உள்ளனர்.துனிசியாவின் போராட்டத்தில் 'அந்நஹ்ழா' இஸ்லாமிய இயக்கம் பின்னணியில் இருந்தது. எகிப்து நாட்டில் ஆங்கிலேய இராணுவத்தில் பணியாற்றிய 06 இராணுவத்தினரும்இ ஓர் ஆரம்ப அரபு மொழி ஆசிரியரும் இணைந்து தொடங்கிய இயக்கம் தான் இஹ்வானுல் முஸ்லீம் மீன் இயக்கமாகும்.....

நிறைவு