Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

"தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்"

"தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 24)

நான் இனம்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், என்னை ஏற்றிய வாகனமோ ஒரு மணி நேரமாக ஒடியது. இறுதியில் வாகனம் நிறுத்தப்பட்டதும், என்னை இறக்கியவர்கள் நாயைப் போல் இழுத்துச் சென்றனர். எனது கண் கட்டப்பட்ட நிலையில், கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில், எனது வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. அதேநேரம் நான் கட்டியிருந்த சாறத்தைக் (லுங்கி) கழற்றி, என்னை முற்றாக நிர்வாணப்படுத்தினர்.

இதன் மூலம் தமது பாலியல் வக்கிரத்தையும் சித்திரவதையின் ஒரு ஊடகமாக்கினர். என்னை ஒரு கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற நேரம் சரியாக மாலை 7.30 க்கும் 7.35 இடைப்பட்ட ஒரு நேரமாகும். ஏனெனின் என்னை நிர்வாணப்படுத்தியபடி அழைத்துச் சென்ற நேரம், தமிழீழக் கம்யூனிசக்கட்சி என்ற பெயரில் நடைபெறும் வானொலிச் செய்தி, புலிகளின் வதைமுகாமில் கேட்டுக் கொண்டிருந்ததை கேட்;க முடிந்தது. இந்த வானொலிச் செய்தி போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் சிதைக்க, இலங்கை பேரினவாத இராணுவத்தினால் ஒலிபரப்பப்பட்டது. இந்திய இராணுவம் சமாதானத்தின் பெயரில் ஆக்கிரமித்த காலத்திலேயே, இந்த விடையம் அம்பலமானது.

எனது கடத்தல் நடந்த அதே நேரம், அதற்கு மிக அருகில் இராணுவத்துடன் சண்டை நடத்து வந்தது. புலிகள் இரண்டு வௌ;வேறான அரசியல் செயற்பாடுகளை, இது வெளிப்படுத்தியது. ஒன்று பேரினவாதத்துக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டனர். மறுபக்கத்தில் தமிழ்மக்களை ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையிலும் ஈடுபட்டனர். ஒருபுறம் புரட்சிகர நடைமுறையையும் மறுபக்கம் எதிர்ப்புரட்சிகர அரசியலையும் கையாண்டனர். இப்படித்தான் புலிகளின் அரசியல், எதிர்ப்புரட்சி அரசியலாக பரிணாமித்து அது முற்றாக நிர்வாணமாகியது.

இப்படிப்பட்ட இவர்கள் என் உடலை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்றவர்கள், ஒரு இடத்தில் திடீரென நிறுத்தினர். என்னிடம் கேட்ட முதற் கேள்வி "தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" என்பதே. அவர்கள் இதன் மூலம் எனது மனஉறுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளவே, இந்தக் கேள்வி என்பதை புரிந்துகொண்டேன். தற்கொலை செய்வதற்கு எதிராக எதிர்த்துப் போராட வேண்டும் என்பதே, எனது கொள்கையாக கருத்தாக இருந்தது. உடனடியாக எனது நிலைப்பாட்டுக்கு தலைகீழாக பதில் சொன்னேன். தோல்வி கிடைத்தால் இறப்பதே நல்லது என்று, எனது சொந்தக் கருத்துக்கு மாறாகவே பதலளித்தேன். உண்மையில் எனது நிலை, போராடுவது தான். அக்காலத்தில் புலிகளின் தற்கொலைக் கோட்பாட்டை எதிர்த்து, கடுமையான வகையில் விமர்சித்து வந்;தவன். ஒரு மனித உயிர் வாழ்வதற்காக போராட வேண்டியது இயற்கையின் விதியாகும். போராடும் உரிமையை புலிகள் தமது உறுப்பினருக்கு வழங்க மறுத்து, தற்கொலை ஊடாக கொன்றுவிடும் கோட்பாடு மற்றும் நடைமுறை, மக்களின் போராட்டத்தையே நிராகரிப்பதாகும். இயற்கை வாழ்வில் மனிதன் தனது நோக்கத்தை அடைய போராட்டத்தையே முன்வைக்கின்றதே ஒழிய, தற்கொலையை அல்ல. ஆனால் புலிகள் இயற்கைக்கு மாறாக தற்கொலையை தீhவாக வைத்ததுடன், அதையே என்னிடம் ஒரு கேள்வியாக வைத்தனர். அவர்களின் சித்திரவதையின் நோக்கத்தை புரிந்து கொண்டு, அவர்களின் கருத்து நிலைக்கு சென்று பதில் அளித்தேன்.

எதிரியையும், அவனின் நோக்கத்தையும், அவனின் பயந்த தற்கொலை மனப்பான்மைக்கு இசைவான அடிப்படையில் பதில் அளிக்கும் போது, எதிரியை நாம் திசைதிருப்ப முடியும். எனது சொந்த கருத்துக்கு முரணான பதிலூடாக, அதை குழப்புவதன் ஊடாக, எனது உறுதியாக எதிர்த்து நிற்கும் போர்க் குணாம்சத்தை அடையாளம் காணவிடாது தடுப்பதன் மூலம், அவர்களின் நோக்கத்தை நெருக்கடிக்குள்;ளாக்க முடியும். புலிகளின் வீரமிக்க தலைவர்களும், அவர்களின் அணிகளும், அரசின் சித்திரவதையும், சிறையையும் எண்ணி பயந்து நடுங்கும் கோழைகளாக இருந்ததால் தான், கோழைத்தனமான தற்கொலையை அவர்கள் தம் அரசியல் நடைமுறையாக முன் மொழிந்தனர். இதைத்தான் பிரபாகரன் தன் இயக்க கொள்கையாக தேர்ந்தெடுத்தார்.

பேரினவாத அரசின் சித்திரவதையை எதிர் கொண்டு எதிர்த்துப் போராடும் மன வலிமையற்ற புலிகளின் தலைமை, தற்கொலை ஊடாக கோழைத்தனமாக ஒரு போராட்டத்தில் இறக்கின்றனர். இந்த கோழைத்தனம் என்னிடமும் இருக்கின்றதா என்பதை அறியவே, அவர்களின் முதல் கேள்வியையும் முன்வைத்தனர். பிரபாகரனின் பயந்த கோழைத்தனம், அவர் பங்கு கொண்ட ஒரு இராணுவ நடவடிக்கையில் நிகழ்ந்தது.

இணுவிலில் 18.5.1977 இல் கொல்லப்பட்ட பொலிசை (இரண்டு சண்முகநாதன்) சுட்டுக் கொல்லச் சென்ற இருவரில் பிரபாகரனும் ஒருவர். இந்த இடத்தில் பிரபாகரனுடன் சென்ற மற்றவர் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்ட போது, அந்த பொலிசை அவர் கட்டிப் பிடித்த நிலையிலும், பிரபாகரன் தனது துப்பாக்கியால் அந்த பொலிசை சுடப் பயந்த தொடை நடுங்கியாகவே நடுங்கியவர். கட்டிப் பிடித்தவரே பின்பு அந்தப் பொலிசை சுட்டுக் கொன்றார்.

இதனால் தான் பிரபாகரன் எப்போதும் தனது தோழர்களை ஏமாற்றி, அவர்கள் அறியாத வண்ணம் பிடரியில் ஈனத்தனமாக கொன்றானோ! புலிகள் இயக்கத்தில் இருந்து 1978 இல் எஸ்.எம்.ஐp (ளு.ஆ.பு) யுடன் ஒடிப்போனவர்தான், இன்றைய புலிகளின் தலைவர் பிரபாகரன். ஓடிப்போய் ரெலோ (குட்டிமணி, தங்கத்துரை, ஒபரேதேவன்) இயக்கத்துடன் இணைந்து நீர்வேலி வங்கி, திருநெல்வேலி வங்கி, குரும்பசிட்டி நகைக்கடை கொள்ளை முதல் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் செட்டியின் கொலை என பலவற்றில் ஈடுபட்டவர். குரும்பசிட்டி அடவு கடையை கொள்ளையடித்தவர்கள் பொது மக்களையும் சுட்டுக் கொன்றனர். பின்பு ரெலோவில் இருந்து 80 இலட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் புலிக்கு ஒடி வந்தவர்தான் வீரமிக்க "மேதகு" தலைவர் பிரபாகரன். அப்போது புலிகள் இயக்கத்தின் தலைவர் இராகவன் ஆவர். அந்த ராகவனை பின்னால் புலிகள் இயக்கத்தை விட்டே துரத்திவிட்டனர். அதே நேரம் குட்டிமணி, தங்கத்துரை இனந்தெரியாத நபர்கள் கொடுத்த தகவல் மூலம், பிடிபட்டனர். இதனால் பிரபாகரனுக்கு அன்று குட்டிமணி, தங்கத்துரை இயக்கப் பணத்துடன் ஒடிய குற்றத்துக்கு தண்டனை வழங்க முடியாது போனது. ஒபரேதேவனை பின்பு புலிகள் சுட்டுக் கொன்றனர்.

அங்கும் இங்குமாக அலைந்த திரிந்த புலித் தலைவர் தன்னுடைய சொந்த கோழைத்தனமான துரோக முகத்தை மூடிமறைக்க, தன்னுடன் இயக்கத்தில் இருந்த அனைவரையும் தனிமனிதனாக கொன்று போட்டார். இதன் மூலம் மாபெரும் தீர்க்கதரிசனமிக்க சதிகார "மேதகு" தலைவரானார். இதன் மூலம் புலிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்தவராக காட்டி, அதன் வரலாற்றை இருட்டாக்கினார். பந்தம் பிடித்தவர்களினதும்;, நக்கிப் பிழைக்கும் கூட்டத்தினதும், வெளிச்சத்தில் பவனி வந்தார். புலிகளின் தலைமை மற்றும் அதன் நிர்வாகத்தை பொறுத்த வரையில், புளட் புலிகளில் இருந்து பிரிந்து உருவாக முன்பு பிரபாகரன் ஒருநாளும் தலைமைப் பதவியை வகித்ததில்லை. சுந்தரம் சிறந்த குறி பார்த்து சுடும் வீரன் என்பதால், பிரபாகரன் அவன் மேல் சொந்த இயக்கத்திலேயே காழ்ப்பு கொண்டிருந்தவன். இதனால் சுந்தரத்தை புலிகளின் "மேதகு" தேசிய தலைவர் பிரபாகரன் சுட்டு கொன்றான்;.

கிட்டு புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தண்டனை பெற்றவன்தான்;. இயக்கத்தில் தாழ்ந்த சாதி இளைஞர்களை தனது அடிமையாக மாற்றி, தனது கோவணத்தைக் கூட தோய்ப்பிக்கும் சாதி வெறி கொண்ட மிருக ஜென்மமாக இருந்தான். இதனால் இயக்கத்தை விட்டே வெளியேற்றப்பட்டவன்; தான். புளட்; புலிகள் இயக்கத்தில் இருந்து உடைந்த பின்பு, பிரபாகரனால் மீண்டும் புலிகளில் சேர்க்கப்பட்டவன்; தான் இந்தப் பொறுக்கி. லும்பன் வாழ்விலோ ஒரு கோமாளி. யாழ் மண்ணை இந்தக் கோமாளி தன் கோமாளித்தனங்கள் மூலம் ஆண்டது என்பது, யாழ் மேட்டுக்குடி மனப்பாங்குக்கு பொருத்தமானதே. அதனால்தான் பிரபாகரனுக்கு பொருத்தமானவனாக இருந்தான்;. படுகொலைகளை செய்யும் ஒரு முட்டாளின் லும்பன் அதிகாரத்தில், படுகொலைகள் மூலம் தான் யாழ் நிர்வாகம் உருவாக்கப்பட்டது. இந்த அதிகாரத்தில் புலிகளின் தலைவனாக மாறிய கிட்டு, பிரபா மற்றும் மாத்தையாவின் அதிகாரத்தை ஏற்க மறுத்தான். இதனால் பிரபாகரன் மாத்தையாவின் உதவியுடன் கூடிய கூட்டுச் சதி மூலம், கிட்டுவை கொல்ல எடுத்த முயற்சி தோல்வி கண்டது. ஆனால் அவன் காலைப் பறித்ததன் மூலம் விடப்பட்ட எச்சரிக்கைகள் ஊடாக, அதிகாரத்தில் இருந்து அவன் தூக்கியெறியப்பட்டான்;. அவனின் கீழ் இருந்த ஊத்தை ரவி, மதன், ரகீம் முதல் ஐவர் கொண்ட அதிகாரம் கொண்ட குழு பந்தாடப்பட்ட நிலையில், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

இந்தக் கிட்டுவின் மீதான தாக்குதல் என்னை கடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன் நடந்தது. இந்தக் கிட்டுவின் கும்பல் அதிகாரத்தை இழந்தது, என்னை புலிகள் சித்திரவதை செய்து கொண்டிருந்த காலத்தில் தான். ஐவர் கொண்ட அவர்களின் குழு அதிகாரம் இழந்தது. அன்று, எனது வதைமுகாம் அதைக் கொண்டாடியது. கிட்டு மீதான இந்தத் தாக்குதலை பின்தளத்தில் இருந்த என்.எல்.எவ்.ரி. மத்திய குழு, தளத்தில் இயங்கிய எம் அமைப்பே செய்ததாகவே நம்பியது. இது போன்ற தாக்குதலை புலிக்கு எதிராக நடத்தவும், ஒரு இராணுவக் குழுவை அமைத்தவன் என்ற வகையில், இதில் சந்தேகப்பட்டு மீள மீள என்னிடம் கேட்டனர். நாம் இல்லை என்று சொன்ன போதும், அதை நம்பாது தொடர்சியாக கேட்டு வந்தனர். இப்படி போராட்டம் தொடர்பாக, எமது அமைப்பில் முரண்பாடு தீவிரமாகியிருந்தது. இக்காலத்தில்தான் நான் புலியால் கடத்தப்பட்டேன்.

கிட்டுவை புலிகள் கொல்ல முயன்று அவனுக்கு கால் இல்லாது போனது. இந்த நிலையில் கிட்டுவை புலிகள் வெளிநாட்டுக்கு அனுப்பினர். அவன் இங்கும் தனது பழைய அதிகாரத்தை நிறுவி, வெளிநாட்டிலும் தளக் கட்டுப்பாட்டை அழித்தான். இதனால் மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு, கப்பல் வழியாக அழைக்கப்பட்ட இடத்தில், இந்திய விஸ்தரிப்புவாதிகள் வள்ளத்தை தாக்கியபோது அதில் கொல்லப்பட்டான்;. இவனை மாத்தையாவே இந்திய இராணுவத்துக்கு தகவல் கொடுத்து காட்டிக் கொடுத்ததாக புலிகள் கூறியதன் பின்னணியிலும் கூட, சில உண்மைகள் உண்டு எனின் இந்தக் காட்டிக் கொடுப்பில் மாத்தையா அல்ல, பிரபாகரனே செயல்பட்டிருப்பான். ஏனெனில் மாத்தையாவின் அதிகாரம் அப்போது முடிவுக்கு வந்திருந்தது. கிட்டு தொடர்பான தகவல்கள் மாத்தையாவுக்கு தெரிந்திருக்காது. இப்படி அதிகாரம் இழந்தவன் இன்னொரு அதிகாரம் இழந்தவனுடன் கூட்டுக்கு போவானே ஒழிய, அதிகாரம் உள்ளவனுக்கு சார்பாக இருக்கமாட்டான். ஐரோப்பாவிற்கு வந்திருந்த நேரத்தில், பிரபாகரனின் அதிகாரத்துக்கு கட்டுப்படாது ஆட்டம் போட்டான். புலத்தில் கிட்டு, திடீர் கலைஞன் ஆனான். இரவல் கலைப் படங்களை தனதாக்கி, மாபெரும் கலை மோசடிக்காரனானான். அவனின் தொழிலே ஒரு தனிரகம். லும்பன் வாழ்வுக்குரிய ஒருமை மொழியில், தூசணத்தை தனது அதிகாரபூர்வமான மொழியாக்கியவன். யாழ் மண்ணில் ரெலோவை உயிருடன் கொழுத்திய ஒரு மனித மிருகம். இந்த மிருகத்தின் கையில் மக்களை நேசித்த சில நூறு உயிர்கள் சிக்கி, சித்திரவதையை சந்திந்து பரிதாபகரமாக இறந்து போனார்கள்;. இவன் அதிகாரம் நிலவிய காலத்தில் துரோக இயக்கங்கள் தோன்றிவிடவில்லை. ஆனால் படுகொலைகளே, இவனின் போராட்ட வடிவமாக தலைவிரித்தாடியது. இக்காலத்தில் தான், நாம் இவனுக்கு எதிராக போராட வேண்டியிருந்தது.

தொடரும்

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )

பாகம்- 1 பாகம்- 21

பாகம்- 2 & 3 பாகம்- 22

பாகம்- 4 & 5 பாகம்- 23

பாகம்- 6 & 7

பாகம்- 8 & 9

பாகம்- 10

பாகம்- 11

பாகம்- 12

பாகம்- 13

பாகம்- 14

பாகம்- 15

பாகம்- 16

பாகம்- 17

பாகம்- 18

பாகம்- 19

பாகம்- 20