Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தவின் காலைநக்கும் மேவின் வெட்கம் பற்றிப்பேசுவது விந்தையாயிருக்கிறது!

"நாட்டை பாதுகாக்கும் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், மற்றும் இராணுவத்தினருக்கு அபகீர்த்தி உண்டாக்கும் நோக்கில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறன.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து வெட்கம் கெட்ட செயல்களில் ஈடுப குமார் குணரத்தினத்துக்கு எவ்வித உரிமையும் கிடையாது. திமுது ஆட்டிகலவின் கண்கள் கட்டப்பட்டு வேனில் அழைத்துச் சென்றதாக கூறும் போது, இருவர் இறங்கிச் செல்வதை திமுது ஆட்டிகல எவ்வாறு பார்த்தார்" என பாராளுமன்ற பேட்டைரௌடி மேவின் கூறமுடிகின்ற அவலம்தான் இன்றைய அபகீர்த்தியென்பதை மக்கள் உணர்ந்து கொண்டாலும் வெளிக்கொணர முடியாத பாசிசப்பிடிக்குள் இறுக்கப்பட்டுள்ளது தான் இன்றைய உண்மை நிலைமை.

எனினும் விடுபட்டதும் கட்சி அலுவலகத்திற்குச் சென்று நாட்டு மக்களிற்கு தனக்கு நடந்ததை கூறிய திமுது ஆட்டிக்கலவின் துணிச்சல்தான் மக்களின் உணர்வுகளாய் மாறும்.

--முரளி 13/04/2012