Sat03302024

Last updateSun, 19 Apr 2020 8am

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவனை விடுவித்த சட்டப்புரளி சிறிகாந்தா

சிறுமிகள் மீதான அதிகரிக்கும் பாலியல் கொடூரத்திலும் இந்த ஈனப்பிறவிகளை காப்பது அரசியல் அழுத்தங்களும், காசுக்காய் சட்டம் பேசும் கூட்டமும்தான். தமிழர் விடுதலையைப் பற்றி வாய்கிழியப்பேசும் கூட்டமைப்பு சிறிகாந்தா,

 

“உரும்பிராய் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இரு வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த இல்லத்தின் பொறுப்பதிகாரியும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான அப்பாத்துரை ஈஸ்வரநாதன் (வயது58) யாழ்.நீதிமன்றினால் பிணையில் எடுத்துள்ளான்.”

 

“சந்தேகநபரின் பிணை மனுவை எதிர்த்து கடந்த புதன்கிழமை வாதாடிய சட்டத்தரணி கே.சுகாஸ், பொதுவாக எந்த வழக்கு சம்பந்தமானதாக இருந்தாலும் அது பற்றி விசாரணைகளை 14 நாள்களுக்குள் முடிக்காத பொலிஸார் இந்த வழக்கில் மட்டும் எப்படி வழக்கு விசாரணையை இவ்வளவு விரைவாக முடித்தனர் என்று கேள்வி எழுப்பினார். சந்தேகநபர் தான் தன்னை வன்புணர்வு செய்தார் என்று பாதிக்கப்பட்ட சிறுமி விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆனால் வேறு யாரோ தான் வன்புணர்வு செய்தார்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர். நன்னடத்தை அதிகாரிகளும், சட்ட வைத்திய அதிகாரியும் தேவையற்ற விதத்தில் பிறரால் அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்  என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது”


குற்றவாளியைவிடக் கொடூரமான சட்டப்பேய்களிற்கு எதிராய் மக்கள் நலன்சார் அமைப்புக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

--முரளி 31/03/2012