Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

வாக்குப்போட்டதும் வாயைமூடிக்கொள்

நாம் என்ன செய்ய வேண்டும்? இதனை இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று எவரும் கூறவேண்டியதில்லை. நாட்டில் நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலை நிறுத்துவதற்குத் தேவையான தூரம் பயணிப்பதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இது எமது மக்களுக்காக நாம் செய்ய வேண்டிய அர்ப்பணிப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழு தனது வரையறையை மீறிச் செயற்பட்டுள்ளது. எனவே அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குறியான விடயமாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றியிருந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே ஒழிய இலங்கை அரசாங்கத்தின் முடிவை அது எவ்வகையிலும் பிரதிபலிக்கவில்லை என இலங்கை அமைச்சரவை சார்பாகப் பேசவல்ல அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபெயவர்த்தன தெரிவித்துள்ளார்.


நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், இருதரப்புகளிலும் உள்ள தீவிரவாத சிந்தனை கொண்டோரின் இடையூறுகள் காரணமாக அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் சிலவேளை சிக்கல்கள் தோன்றக்கூடுமென்றும் தெரிவித்தார்.


முன்பின் முரணாக இவர்கள் சொல்ல வருவது பாசிசம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதையும்,  மக்களை அடங்கிப்போங்கள் என தங்கள் மொழிகளில் சொல்கிறார்கள். தாம் என்ன செய்ய வேண்டும், இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கொதிப்பில் வெளிவந்ததில்லை. இது வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் போராடும் மக்கள், ஊடகத்துறையினர், மக்கள் போராட்ட அமைப்புக்கள், அடக்கு முறைக்குள்ளாகும் மக்களிற்கான மகிந்தவின் எச்சரிக்கையானது இனவாதத்தால் அரசாள முடியாத போது சர்வாதிகாரம் வெளிப்படையாகவே தனது சுயரூபத்தை காட்டுகிறது.


"வாக்குப்போட்டதும் வாயை மூடிக்கொள்" என்பது தான் ஆளும் வர்க்கங்களின் ஆட்சியாளர்கள் காலங்காலமாக பரந்துபட்ட மக்களிற்கு கூறிவருவது.  இது பரந்துபட்ட மக்கள் ஜக்கியத்தினையும் ஒன்றுபட்ட போராட்டத்திற்க்கான பாதையினையும் திறந்து விடுகிறது.

--முரளி 30/03/2012