Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தம்பி பிரபாவுக்கு எழுதியகை, மேதகு மகிந்தாவுக்கு வரைகிறது

மேதகு மகிந்தாவுக்கான கடிதத்தில், ஆனந்தசங்கரி அவர்களின் அந்நிய விசுவாசமானது போர் வெற்றியில் இந்தியா, அமெரிக்கா முதுகை காட்டிக்கொண்டிருந்தால் நாடு சிதைந்திருக்குமாம். முன்னர் தம்பியை ஆயுதத்தை கீழே போடச் சொன்னவர், இப்போது நாடு சிதைவிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டதாம். மகிந்தவிடம் “இந்தியன் மொடலை?” கையில் எடுக்கச்சொல்கிறார்.

“நவீன ஆயுதங்கள் கொடுத்து பல நாடுகள் இலங்கைக்கு உதவியளிக்காது விட்டிருந்தால், இலங்கை இராணுவத்தினரால் தனித்து இப்போரை வென்றிருக்க முடியாது. இந்தியாவின் ஒரு மாநிலமாகிய தமிழ்நாடு பொலிசின் “கியூ” பிரிவினர் மிகத் திறமையாக செயற்பட்டு பல தடவைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்க இருந்த பல தொன் எடையுள்ள வெடி மருந்துக்களை தேடி பிடித்து கைப்பற்றிய இந்த உதவிகளை, நீங்கள் சுலபமாக  மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். இந்திய கடற்படையின் கரையோர காவல் பிரிவினர் ஆற்றிய பெரும் தொண்டால் யுத்தம் வெல்லக் கூடியதாக இருந்தது. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு முதுகை காட்டிக் கொண்டிருந்திருந்தால் இந்த நாடு சிதைந்திருக்கும், யுத்தத்திலும் தோற்றிருக்கும். இந்த விடயங்களை இலங்கை என்றும் மறக்கக் கூடாது.” என கூறுவதுபவர்  மக்கள் அழிவில் இந்திய அரசின் கரங்கள் சுத்தமானதாக காட்ட வெளிப்படுவதை யாரை நம்பச் சொல்கிறார்.

இதற்காகவே சங்கரியை தூக்கி தலையில் வைத்துக்கொண்டாடும் இந்திய அரசின் அடிவருடிகளின் பெரிய கூட்டமே புலத்தில் இருக்கிறது. ஆனால்  மகிந்த அரசையும், அந்நியசக்திகளின் நீலிக்கண்ணீரையும் குறித்த சொந்த பட்டறிவானது, மக்களுக்கு நிறையவே கற்றுக்கொடுத்திருக்கிதென்பதுதான் இன்றைய யதார்த்தம்.

--முரளி 27/03/2012