Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

துரோகிப்பட்டங்களும் புலிப்பினாமிகளின் உள்வீட்டு குத்து வெட்டும்

புலிகளும் அவர்களின் பினாமிகளும் காலங்காலமாய் தமது அரசியல் விமர்சகர்களை துரோகிகள் என முத்திரை குத்துவது வழமை. ஆனால் தேசிய விடுதலைபோராட்டத்திதை அழித்த, அழிவுக்கு வழிகாட்டிய, உள்ளுக்குள் இருந்து கட்டிக்கொடுத்த, பிரபாகரனை பிணமாக்கி  கோவணத்துடன் படங்காடியதென  படுபயங்கரமான  உண்மையான துரோகிகளை உருவாக்கியது புலிகள் இயக்கம் தான். 

இன்றுள்ள உச்ச சொச்ச பினாமி புலிகளின் கருத்துப்படி புலிகளின் ள்வீட்டில் உருவாகிய துரோகிகளில் பிரபலமானவர்கள் மாத்தையா, கருணா, பிள்ளையான், கேபி என வரிசைப்ப் படுத்தலாம்.

இதற்காப்பால் புலிகளின்  "சாம்பல்"   இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், பினாமி  தொழிலதிபர்கள் என சில ஆயிரம் துரோகிகளை புலிகள் இயக்கம் உருவாக்கி உள்ளது. இது நாங்கள் கண்டுபிடித்ததல்ல புலிகளின் வரலாற்றினை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும் .

தற்போது    புலிகளின் பினாமிகள் அமைப்புகளின் துரோகி லிஸ்ட் இல் முதல் இடம் பிடித்துள்ளவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.  அவரின் உருவ பொம்மை சில வாரங்களுக்கு முன் யாழ் -பல்கலைகழக கட்டிடத்தில் "தூக்கில்" தொங்கியது.

இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யுத்தத்தின் போது பெரும்பாலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர் என  கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். மேலும், புலிகளை நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது புலிகளும், இராணுவமும் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர். எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் என கோருவதில் அர்த்தம் இல்லை என  தெரிவித்தார்.


போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் பொதுமக்களை இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அனுமதித்திருந்தால் பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். இதனாலேயே பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.


அரசியல் தீர்வு திட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்தை தான் தமிழர்கள் முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேற்கூறியபடி இந்த பேட்டியானது அவரை தொடர்ந்தும் "துரோகிகள்" லிஸ்டில் அலங்கரிக்க உதவியுள்ளது.  

இதேவேளை சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. 

இதே போன்று கடந்த வருடம் அரசு மற்றும் புலிகளின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்  சம்பந்தமாக நோர்வேஜியன் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த, நெடியவன் தலைமையிலான   புலிகளின் அமைப்பான NCET தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா, "புலிகளும் அதே குற்றத்தை (அதாவது   மனித குலத்திற்கெதிரான குற்றங்கள்)  புரிந்தவர்கள், ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாது. காரணம் புலிகளின் தலைமை இறந்து விட்டது", எனக் கூறியிருந்தார்.

இதுவரை புலத்தில் முதல் முறையாக புலிகளை சார்ந்த எவரும் புலிகளை   மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்தவர்கள் என பகிரங்கமாக அறிக்கை வெளியிட முன்வரவில்லை. அந்த அளவில் பஞ்சகுலசிங்கத்தின் முயற்சி பாராட்டத்தக்கது.

அதேவேளை கந்தையா கூறும் அதே உண்மையை பகிரங்கமாக கூறும்  சுமத்திரனை துரோகி என முத்திரை குத்துகின்றன புலம்பெயர்  மற்றும் TNAயின் உள்வீட்டு ஊடகங்கள். சிலவேளை இன்னும்    கந்தையாவின் பேட்டி பினாமிகளை சென்றடையாது  இருக்கலாம் அல்லது   அவர் பண ஊடக  பலம் மிக்க நெடியவன் குழுவில் இயங்குவது காரணமாக இருக்கலாம்.

கந்தையாவின் பேட்டிக்கான தொடுப்பக்கள் கீழே

http://www.aftenposten.no/nyheter/iriks/article4113498.ece

http://ndpfront.com/tamil/index.php/articles/articles/maaneena/604-2012-02-02-160931

 
--கலியுகவரதன் காத்திகேசு 25/03/2012