Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மஹிந்த வீட்டு நாய் கூட நம்பாத பொய்ப்பிரச்சாரம்

நேற்று இடம்பெற்ற பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மஹிந்த, "எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

 மேலும் தனதுரையில் : “நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை. அதேவேளை சிறிலங்கா அரசின் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். நாட்டின் பிரச்சினைகளை உள்ளக வழிமுறைகள் மூலமே தீர்க்க வேண்டும்.

சதிகாரர்கள், சந்தர்ப்பவாதிகள், தேசத்துரோகிளுக்கு நாடு இரையாகாமல் இருப்பதற்கு நாடெங்கும் மக்கள் ஒன்றுபட வேண்டும்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை 15 நாடுகள் எதிர்த்துள்ளன. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மேலும் 8 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்துள்ளன.

சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகள் எதிர்காலத்தில் தீவிரவாதத்தின் விளைவுகள் குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


நாட்டை கூறு போட்டு இந்தியனுக்கும்,  சீனாக்கரனுக்கு விற்று கொள்ளையடிக்கும் பாசிஸ்ட் மஹிந்த "எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை" என சூளுரைக்கிறார். எல்லா வளங்களையும் மேற்படி நாடுகளுக்கு விற்றது மட்டுமல்லாமல்; உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என மஹிந்த பாசிச அரசு கடன் வாங்காத வங்கிகளே உலகத்தில் கிடையாதென்ற நிலை வந்துள்ளது . மேற்படி ஐக்கியநாடுகள் சபை தீர்மானம் தனது அரசியல் நிலையை உள் நாட்டில் மேலும் உறுதியானதாக ஆக்கியுள்ளதென்பது மஹிந்தவுக்கு நன்கு தெரியும். அதை மேலும் வலுவாக்க கதைக்கும் பாசிச பிரச்சாரம் தான் இப்போ பாசிஸ்ட் மஹிந்த மேற்கொள்ளவது .


"இனித்தான் வெளிநாட்டு சக்திகள் உள்ளே வர முயற்சிக்கின்றன" என விடும் பீலாவை மஹிந்த வீட்டு நாய் கூட நம்பாது .

-மா.நீனா 24/03/2012