Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கூடங்குளமும் ஜெனிவா தீர்மானமும்

கருணாநிதி, ஜெயலலிதா ஒரணியில்!
தமிழக மக்களின் மீதான கரிசனை என்பதோ, ஈழத்தமிழர் மீதான கரிசனை என்பதோ  ஓட்டுக்கட்சிகளின் வாக்கு வேட்டைக்கான வியுகமாகவே தொடர்கின்ற போதும்; தம்மிடையே மோதிக்கொள்வதனூடாக யார் ஏய்ப்பதில் வல்லவர்கள் என்பதை நிருபிப்பதற்கான போட்டியாக வெளிப்படுகிறது.

 

இங்கே தான் இவர்களது மக்கள் விரோத நிலைப்பாடானது அம்பலமாகின்றது.

 

--ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கெதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடும் என்ற பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தது,  திமுக தலைவர் கருணாநிதியின் நாடகத்திற்கு துணை போகும் செயல் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்ததை கருணாநிதி பதிலுக்கு விமர்சித்துள்ளார்.


பிரதமரின் அறிவிப்பு திமுகவின் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி  எனவும் கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா,  போராட்டக்காரர்களுக்கு  ஊக்கமும்  கொடுத்து விட்டு  இப்போது  அவர்களை  கைது  செய்து வருவதற்குப்  பெயர்தான்  நாடகம்  என்றும்  கருணாநிதி  குறை  கூறியிருக்கிறார்.


கடந்த ஆறு மாதமாக அந்த அணு மின் நிலையம் மூடப்பட்டு, தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு மின்சாரப் பற்றாக்குறையும்  ஏற்பட்டு- இருள்  சூழ்ந்ததோடு, கடந்த ஆறு மாத காலமாக அந்த கூடங்குளம் நிலையம் மூடப்பட்டு அலுவலர்களுக்கெல்லாம்  பணியே  இல்லாமல்  ஊதியம்  கொடுத்த  அளவிலே மட்டும் 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படக் காரணம் யார் என்று வினவுகிறார் கருணாநிதி.--


ஈழத்தமிழருக்கு செய்த துரோகங்களை மாறிமாறி பட்டியலிடும் போக்கில் சாதாரணமாகவே கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிரான மக்கள் போராட்டத்தால் அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டதாய் கலைஞர் கண் கலங்கிப்போயிருக்கிறார்.


இடிந்தகரை மக்கள் மீதான அம்மா அரசின் கோரதாண்டவம் தொடர்கிறது. 11 முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் செல்லவிடாது முடக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நந்திக்கடல்வலம்!


வாழ்வதற்காய் போராடும் மக்களிற்காய் தமிழக மக்கள் அமைப்புகள் ஆதரவுப்போராட்டம் வெடிக்குக!


இடிந்தகரை மக்களுடன் கரம் கோர்ப்போம்!!

-முரளி 21/03/2012