Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியத்திற்கு குடை பிடிக்கும் தமிழ் தேசிய ஊடகவியல்

கடந்த பல வருடங்களாக நகரசபை ஊழியர்களுக்கு வழங்கிய கூலி உயர்வை தொழிலாளராகிய தமக்கு வழங்க மறுக்கும் சாதிய கொடுமைக்கு எதிராகவும்!

தற்காலிகமான தங்கள் வேலையை நிரந்தரமாக்க மறுக்கும் சாதிய கண்ணோட்டத்தை எதிர்த்தும்!

கல்விகற்ற தங்கள் குழந்தைகளுக்கு வேலை வழங்க மறுக்கும் சாதிய ரீதியான ஒடுக்குமுறையை எதிர்த்தும்!

திருகோணமலை நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளார்கள் மே 2 - 3 ஆம் திகதிகளில் போராட்டம் ஒன்றை நடாத்தி இருக்கின்றனர். "தமிழனுக்கு" எதிரான "தமிழினின்" போராட்டம் என்பதால் இவை தமிழ் ஊடகங்களில் செய்தியாகவில்லை. இதுவே "சிங்களவனுக்கு" எதிரான போரட்டம் என்றால் தலைப்புச் செய்தியாகி இருக்கும். இது தான் தமிழ் ஊடாகவியலின் ஊடாக விபச்சாரம்.

அடிநிலை தொழிலாளர் மீதான சாதி ரீதியான திட்டமிட்ட ஒடுக்கு முறைக்கு எதிரான இந்தப் போராட்டம் "ஆன" செய்தியாக கூட ஊடகங்களில் வரவில்லை. இதை விட கொடூரம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. போராடியதை செய்தியாகக் கூட வெளி வரமுடியாத அளவுக்கு அந்த மக்களின் ஜனநாயக உரிமை திடட்மிட்டு "தமிழனால் தமிழனுக்கு" மறுக்கப்பட்டு இருக்கின்றது.

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த "சக்கிலிய" சமூகத்தை பார்த்தாலும் தொட்டாலும் தீட்டு என்று ஒடுக்கும் சாதிகள் மட்டும் கருவதில்லை, தமிழ் ஊடகவியலுக்கும் இது தீட்டாகியதால் இந்த மக்களின் போராட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தலைமை தாங்கப்படும் திருகோணமலை நகரசபை என்பதால், இந்த போராட்டம் மூடிமறைக்கப்பட்டது. இதுவே முஸ்லிம் - சிங்களவர்களின் தலைமையிலான நகர சபையாக இருந்து இருந்தால், தமிழ் மக்கள் என்று சொல்லி ஒப்பாரிப் போராட்டம் நடாத்தி இருப்பார்கள்.

"தமிழனை" தமிழன் ஒடுக்கும் சாதி ரீதியான அடக்குமுறைதான் "தமிழ்" தேசியம் என்பதை கூட்டமைப்பு தலைமை தாங்கும் நகர சபை தன் சொந்த நடத்தை மூலம் மீள நிரூபித்து இருக்கின்றது. இந்த போராட்டம் தொடர்பாக பேட்டி எடுக்க சென்ற சிங்கள பத்திரிகை செய்தியாளர், உதவி மேயரிடம் ஏன் "சக்கிலிய" சமூகத்தில் இருக்கின்ற கல்வி கற்றவர்களை மேலாள அதிகாரி ஊழியர்களாக நியமனம் செய்வதில்லை என்று கேட்ட போது "மனிசருக்கு தான் வேலை" என்றார். அவர்கள் "சக்கிலியர்" மனிசர் இல்லையா என்று கேட்ட போது, கேவலமாக அந்த சாதியை தீட்டித் தீர்த்த வக்கிரம் அரங்கேறியது.

அமெரிக்கா முதல் இந்தியா வரை, நக்கச் சொன்னால் அவர்களின் குண்டியை கூட நக்கிப் பிழைக்க தயாராக இருக்கும் இந்த தமிழ் தேசியத் தலைவர்கள், சொந்த மக்களை சாதி ரீதியாக ஒடுக்கி, அடக்கி, சுரண்டும் கேவலத்தை செய்கின்றனர். இவர்களையும், இந்த சாதிய தேசியத்தையும் தோற்கடிக்காமல் எதையும் நாங்கள் வெல்ல முடியாது. இதைத்தான் திருகோணமலை தொழிலாளர்களின் இந்த போராட்டம் சாதி கடந்து எடுத்துச் செல்லும் செய்தி. தொடரவுள்ள போராட்டம், அதை நாளையும் பறை சாற்றும்.

திருமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாதி வெறி அரசியல்!